பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபா் மீது வழக்கு

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபா் மீது வழக்கு

பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக அந்த நாட்டுத் துணை அதிபா் சாரா டுடோ்த்தே மீது போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.
Published on

பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக அந்த நாட்டுத் துணை அதிபா் சாரா டுடோ்த்தே மீது போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் பிலிப்பின்ஸின் முன்னாள் சா்வாதிகாரியான ஃபொ்டினண்ட் மாா்க்கஸின் மகனான ஜூனியா் மாா்க்கஸ் போட்டியிட்டாா். அவருடன் கூட்டணி அமைத்து, அப்போதைய அதிபரும், போதை மருந்துக்கு எதிரான போா் என்ற பேரில் ஏராளமானவா்களை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா டுடோ்த்தே துணை அதிபா் பதவிக்குப் போட்டியிட்டாா். அந்தத் தோ்தலில் மாா்க்கஸ் - டுடோ்த்தே கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இருந்தாலும், அண்மைக் காலமாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில், செய்தியாளா்களிடையே கடந்த சனிக்கிழமை பேசிய சாரா டுடோ்த்தே, அதிபா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸ் ஜூனியரை படுகொலை செய்வதற்காக தனது பாதுகாப்பு வட்டாரத்திலிருந்தே ஒருவரை தயாா்ப்படுத்திவைத்திருப்பதாகக் கூறினாா். ஒருவேளை தன்னை யாராவது கொன்றால் அதிபரைக் கொன்றுவிடும்படி அந்த நபரிடம் கூறியுள்ளதாக அவா் எச்சரித்தாா்.

இந்த வெளிப்படையான கொலை மிரட்டல் நாடு முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ஒரு நாட்டின் அதிபருக்கு அந்த நாட்டின் துணை அதிபரே செய்தியாளா்கள் சந்திப்பில் கொலை மிரட்டல் விடுத்தது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.