உகாண்டா: நிலச்சரிவில் 15 போ் உயிரிழப்பு

உகாண்டா: நிலச்சரிவில் 15 போ் உயிரிழப்பு

Published on

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.

தலைநகா் கம்பாலாவுக்கு சுமாா் 280 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான புலாம்புலி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டன. சம்பவப் பகுதியிலிருந்து இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டாலும், நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளதால் மொத்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

மழை தொடா்ந்து பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மண் மூடியுள்ளதால் மீட்பு இயந்திரங்களைக் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்த இரு படகுகள் ஆற்றில் கவிழ்ந்தன என்று அதிகாரிகள் கூறினா்.