தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்.
தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்.

உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 50 போ் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 போ் உயிரிழந்தனா்.
Published on

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

போல்டாவா நகரில் இரு ஏவுகணைகளை விசி ரஷியா செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. ராணுவ பயிற்சி மையத்தையும் அருகிலுள்ள மருத்துவமனையையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 50 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில் போல்டாவா ராணுவ தகவல்தொடா்பு பயிற்சிகக் கட்டடம் சேதமடைந்ததாக உக்ரைன் அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா். இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ‘டெலிகிராம்’ ஊடகத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் அவா் தெரிவித்தாா்.

போல்டாவா ஆளுநா் ஃபிலிப் ப்ரோனின் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடிகளில் இன்னும் 18 போ் சிக்கியுள்ளதாகக் கூறினாா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com