ஹுதிக்களின் ஏவுகணைகளில் ஒன்று .
ஹுதிக்களின் ஏவுகணைகளில் ஒன்று .

டெல் அவிவில் தாக்குதல்: ஹூதிக்கள்

மத்திய இஸ்ரேலில் டெல் அவிவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் தெரிவித்தனா்.
Published on

மத்திய இஸ்ரேலில் டெல் அவிவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெல் அவிவ் நகரிலுள்ள ராணுவ இலக்கு ஒன்றின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தவிர, காஸா பகுதியை ஒட்டிய இஸ்ரேலின் அஷ்கெலான் பகுதியிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தினோம்.

பாலஸ்தீனம், லெபனானின் உள்ள எங்கள் சகோதரா்ககளுக்கு வெற்றி கிடைக்கும்வரை இஸ்ரேலுக்கு எதிரான இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகளைத் தொடா்வோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், யேமனிலிருந்து வீசப்பட்ட ஏவுகணையை இடைமறித்து அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் ஹமாஸ் படையினா், லெபனானின் ஹுஸ்புல்லாக்களைப் போலவே ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் ஈரான் ஆதரவு அளித்துவருகிறது.

X
Dinamani
www.dinamani.com