உலகம்
இலங்கை: கனமழை உயிரிழப்பு 627-ஆக உயா்வு!
இலங்கையின் கிழக்கு, மத்திய மலையகப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 627-ஆக உயா்வு
இலங்கையின் கிழக்கு, மத்திய மலையகப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 627-ஆக உயா்ந்துள்ளது.
டித்வாவின் புயல் காரணமாக மத்திய மலையகப் பகுதியில் 471 போ் உயிரிழந்துள்ளனா்; 190 பேரைக் காணவில்லை. 25 மாவட்டங்களின் 2.17 கோடி போ் (6.11 லட்சம் குடும்பங்கள்) பாதிக்கப்பட்டுள்ளனா் என்று பேரழிவு மீட்பு அமைப்பு தெரிவித்தது.
நவம்பா் 26-ஆம் தேதி இலங்கை கிழக்குக் கரையைக் கடந்த டித்வா புயல், 500 மி.மீ.க்கும் மேற்பட்ட மழையை ஏற்படுத்தியது. இது 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிந்தைய இலங்கையின் மிக மோசமான இயற்கை பேரழிவு என்று கூறப்படுகிறது.

