கோப்புப் படம்
உலகம்
இலங்கை: வாகன இறக்குமதி தடை நீக்கம்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு சனிக்கிழமை முழுமையாக நீக்கியது.
வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு சனிக்கிழமை முழுமையாக நீக்கியது.
இது தொடா்பான அதிபா் அனுர குமார திசநாயக்கவின் அறிவிப்பு அரசிதழில் வெள்ளிக்கிழமையே வெளியிடப்பட்டாலும், அது சனிக்கிழமை அமலுக்குவந்தது.
கரோனா நெருக்கடியின்போது கடந்த 2020-இல் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதித் தடை, பொருளாதார நெருக்கடி காரணமாக நீட்டிக்கப்பட்டுவந்தது நினைவுகூரத்தக்கது.