உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!

உலக அளவில் நூறு கோடி டாலர்களுக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரும் கோடீஸ்வரர்கள் குறித்து
உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!
Published on
Updated on
1 min read

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிறந்திருக்கும் 2025-ஆம் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 421.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 233.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

உலக அளவில் நூறுகோடி டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரும் கோடீஸ்வரர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவர்கள்:

  • எலான் மஸ்க் (421.2 பில்லியன் டாலர்)

  • ஜெஃப் பெஸோஸ் (233.5 பில்லியன் டாலர்)

  • லேர்ரி எல்லிசன் (209.7 பில்லியன் டாலர்)

  • மார்க் ஸூக்கர்பெர்க் (202.5 பில்லியன் டாலர்)

  • பெர்னார்டு அர்னால்ட் (168.8 பில்லியன் டாலர்)

  • லேர்ரி பேஜ் (156 பில்லியன் டாலர்)

  • செர்கே பிரின் (149 பில்லியன் டாலர்)

  • வாரன் பஃப்பெட் (141.7 பில்லியன் டாலர்)

  • ஸ்டீவ் பால்மெர் (124.3 பில்லியன் டாலர்)

  • ஜென்சென் ஹாங்க் (117.2 பில்லியன் டாலர்)

99.9 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் அலைஸ் வால்டன் உலகின் கோடீஸ்வர பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் மகளாவார். உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 17-ஆவது இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com