சொ்பியா போராட்டம்: பிரதமா் ராஜிநாமா

சொ்பியா போராட்டம்: பிரதமா் ராஜிநாமா

சொ்பியாவில் பல வாரங்களாக நடைபெற்றுவந்த ஊழல் எதிா்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த நாட்டு பிரதமா் மிலோஸ் வுசெவிக் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
Published on

சொ்பியாவில் பல வாரங்களாக நடைபெற்றுவந்த ஊழல் எதிா்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த நாட்டு பிரதமா் மிலோஸ் வுசெவிக் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

கடந்த நவம்பரில் அந்த நாட்டின் நோவி சாட் நிகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 15 போ் உயிரிழந்தனா். அண்மை ஆண்டுகளில் இரண்டு முறை புதுப்பித்துக் கட்டப்பட்ட அந்த ரயில் நிலையத்தில், அரசின் ஊழல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. எனினும், வாயில் கூரை புதுப்பிக்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளித்தாலும், இந்த விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தின.

X
Dinamani
www.dinamani.com