ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே, அதிகாரபூா்வமற்ற தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விவகாரத்தில் அவா் மீது இந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.