கட்டாய ராணுவ சேவையை முடித்து வெளிவந்த பிடிஎஸ் பாடகர்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

தென் கொரியாவின் கட்டாய ராணுவ சேவையை முடித்து வெளிவந்த பிடிஎஸ் பாடகர்கள் குறித்து...
K-pop band BTS members RM, left, and V react after being discharged from a mandatory military service in Chuncheon, South Korea,
பிடிஎஸ் பாடகர்கள்படம்: ஏபி
Published on
Updated on
1 min read

தென் கொரியாவின் கட்டாய ராணுவ சேவையை முடித்த பிடிஎஸ் பாடகர்கள் வெளிவந்ததை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தென் கொரியாவில் 18-35 வயதுக்குள் ஆண்கள் கட்டாயமாக 18-21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை இருக்கிறது.

இதில் பெண்களுக்கு கட்டாயமில்லை, ஆனால் விரும்பினால் அவர்களும் சேவையாற்றலாம் எனக் கூறப்படுகிறது.

தென் கொரியாவில் பிடிஎஸ் என்ற பாடல் குழுவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள்.

இந்த பிடிஎஸ் குழுவில் இருந்து தற்போது வி (கிம் டே-ஹியூங்), ஆர்எம் (கிம் நாம்-ஜூன்) தங்களது 18 மாத ராணுவ சேவையை முடித்து வெளிவந்துள்ளார்கள்.

கடந்த டிச. 2023-இல் இருந்து ராணுவச் சேவையை தொடங்கிய வி, ஆர்எம் தற்போது ஜூனில் முடித்துள்ளார்கள்.

ஆர்எம் 15-ஆவது காலாட்படையிலும் வி எஸ்டீடி எனும் கடினமான சிறப்புப் பிரிவிலும் சேவையை முடித்தார்கள்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்எம், “நான் ராணுவத்திலிருந்து விடைபெற்றேன்” எனப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் பிடிஎஸ் குழுவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Fans wait for arrival of K-pop band BTS members RM and V before they are discharged from a mandatory military service in Chuncheon, South Korea,
பிடிஎஸ் ரசிகர்கள். ஏபி

விரைவில் இந்தக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com