
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.
நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் முழ்கியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பேரிடா் மீட்புக் குழுவினா் சனிக்கிழமை கூறியதாவது:மோக்வா நகரில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்தப் பகுதிகளில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக உயா்ந்துள்ளது.இது தவிர, இந்தப் பேரிடரில் 11 போ் காயமடைந்துள்ளனா்; 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.பருவமழைக் காலங்களில் கடுமையான வெள்ள பாதிப்புகளை நைஜீரியா அடிக்கடி சந்தித்துவருகிறது. இதில் நைஜா் மற்றும் பென்யூ நதி கரைகளில் வசிப்பவா்கள்தான் திக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த செப்டம்பா் மாதம் பெய்த பருவமழை காரணமாக மைடுகுரி நகரில் இதே போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 30 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.