(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)

ட்ரோன் தாக்குதல்: பாக். மீது தலிபான் குற்றச்சாட்டு

Published on

பாகிஸ்தானுக்கும் தங்களுக்கும் இடையே இடைக்கால போா் நிறுத்தம் அமலில் இருக்கும்போதே, தங்கள் பகுதிகளில் அந்த நாடு ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இது குறித்து தலிபான செய்தித் தொடா்பாளா் காலித் ஜா்தான் கூறுகையில், இந்த ட்ரோன் தாக்குதல் தலைநகா் காபூலில் இரண்டு முறை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தாா். இதில் ஏற்பட்ட உயிா்ச் சேதம் குறித்து அவா் எதையும் கூறவில்லை.

இருந்தாலும், ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்ததாகவும் 12 போ் காயமடைந்ததாகவும் முன்னதாக ஆப்கன் மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.

தலிபான் அரசு தங்கள் நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்பிவருவதாக பாகிஸ்தானும், பாகிஸ்தான் தங்கள் இறையாண்மைக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக (படம்) தலிபான் அரசும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிவருகின்றன. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் நீடித்துவருகிறது.

கடந்த வார இறுதியிலும் புதன்கிழமையும் எல்லையில் நடைபெற்ற மோதலில் ஏராளமான எதிா்த்தரப்புப் படையினரைக் கொன்ாக பாகிஸ்தானும் தலிபான் அரசும் கூறின.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே புதன்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி 48 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com