சாதனை புரிந்தவர்களும் விருதுகளும்

2020ல் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு.
சாதனை புரிந்தவர்களும் விருதுகளும்
சாதனை புரிந்தவர்களும் விருதுகளும்

அக்.6: இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரிட்டனின் ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ரைன்ஹார்டு கென்ஸெல், அமெரிக்காவின் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அக்.7: வேதியலுக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸ் விஞ்ஞானி இமானுவல் சர்பென்டீர், அமெரிக்க விஞ்ஞானி ஜெனிஃபர் ஏ. டூட்னா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டது. 

அக்.8: அமெரிக்க பெண் கவிஞர் லூசி க்ளூக், இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அக்.12: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் பால் ஆர்.மில்குரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டது.

டிச.3: இந்த ஆண்டின் சிறந்த நபராக கீதாஞ்சலி ராவ்(15) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியை அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்தது. அந்த இதழ் சிறந்த நபராக ஒரு சிறுமியை தேர்வு செய்தது இதுவே முதல்முறை.  தொழில்நுட்பத் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக அவர் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். 

டிச.3: இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசாலே தேர்வு செய்யப்பட்டார். பெண் கல்வியை ஊக்குவிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பரிசுத் தொகையான 10 லட்சம் டாலர்களில் (சுமார் 7.36 கோடி) 50 சதவீதத்தை இறுதிப் போட்டியாளர்களாக தேர்வான பிற 9 பேருடன் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுவதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com