இந்திய கிரிக்கெட் 2020: கோலி படை சாதித்தது என்ன?

இந்த வருடம் 24 சர்வதேச ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது. 4 டெஸ்டுகள், 11 டி20, 9 ஒருநாள் ஆட்டங்கள்.
இந்திய கிரிக்கெட் 2020: கோலி படை சாதித்தது என்ன?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு குறைவான ஆட்டங்களில் தான் இந்திய அணி விளையாடியுள்ளது.

இந்த வருடம் 24 சர்வதேச ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது. 4 டெஸ்டுகள், 11 டி20, 9 ஒருநாள் ஆட்டங்கள்.

இதுவரை விளையாடிய நான்கு டெஸ்டுகளில் (அனைத்தும் வெளிநாடுகளில்) மூன்று ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை இந்திய அணி வென்றுள்ளது.

11 டி20 ஆட்டங்களில் இந்திய அணி ஒரு டி20 ஆட்டத்தில் மட்டுமே தோற்று 9 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஒரு டி20 ஆட்டம் மழையால் ரத்தானது. வெளிநாடுகளில் இரு டி20 தொடர்களை வென்றுள்ளது இந்திய அணி. 

9 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 6 ஒருநாள் ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது இந்திய அணி. மோசமாக விளையாடியிருந்தாலும் 3 வெற்றிகளும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கிடைத்துள்ளன. 

 இந்திய   அணி   2020 ஆட்டங்கள் வெற்றிகள்  தோல்விகள் முடிவு   இல்லை 
 டெஸ்ட் 4 1 3 -
 ஒருநாள்  9 3 6 -
 டி20 11 9 1 1

202-ம் ஆண்டில் இந்திய அணி விளையாடிய கிரிக்கெட் தொடர்கள்

* ஜனவரி மாதம் இந்தியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது இலங்கை அணி. டி20 தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. முதல் டி20 ஆட்டம் மழையால் ரத்தானது. நவ்தீப் சைனி தொடர் நாயகன் விருது பெற்றார்.

* ஜனவரியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றார். 

சைனி
சைனி

* ஜனவரி - பிப்ரவரியில் நியூசிலாந்துக்குச் சென்று 3 ஒருநாள், 5 டி20, 2 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடியது. 

டி20 தொடரை 5-0 என வென்று சாதனை செய்தது இந்திய அணி. கே.எல். ராகுல் தொடர் நாயகன் விருதை வென்றார். ஒருநாள் தொடரை 3-0 எனவும் டெஸ்ட் தொடரை 2-0 எனவும் தோற்றது.

* கரோனா காரணமாக இந்திய அணி மார்ச்சுக்குப் பிறகு நவம்பர் வரை எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடவில்லை. நடுவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் பட்டம் வென்றது.

கே.எல். ராகுல்
கே.எல். ராகுல்

* தற்போது, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி - டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. தொடர் நாயகன் விருதை ஹார்திக் பாண்டியா வென்றார். ஒருநாள், டி20 தொடர்களில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமாகி அனைவரையும் சந்தோஷப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டை ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. இந்தமுறையும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சவாலாக விளங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com