மறைவுகள் 2020

ஐம்பது ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.
மறைவுகள் 2020

ஏப்.29 : ஹிந்தி திரைப்பட நடிகர் இர்பான் கான் (54) பெருங்குடல் தொற்று பாதிப்பால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். 

ஏப்.30:    இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த ஹிந்தி திரைப்பட நட்சத்திர நடிகர் ரிஷி கபூர் மும்பையில் காலமானார். 
அவருக்கு வயது 67. 

ஏப்.30: இந்திய கால்பந்து முன்னாள் வீரர் சுனி கோஸ்வாமி (82) மாரடைப்பால் காலமானார். இவர் தலைமையில் கடந்த 1962-ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. 

மே 25: சண்டீகரில் பிரபல இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியர்(95) உடல்நலக்குறைவால் காலமானார்.  

ஜூன் 10: திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

ஜூன் 14: ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை புறநகர் பகுதியான பாந்தராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆக.17:  புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் (90) மாரடைப்பால் காலமானார்.

ஆக.28: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் காலமானார்.

ஆக.31: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் காலமானார். 

செப்.6: அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரர் துறவி கேசவானந்த பாரதி வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79. 

செப்.25: ஐம்பது ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.

செப். 27: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) மாரடைப்பால் காலமானார். 

அக்.8: மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான்(74) உடல்நலக் குறைவால் காலமானார்.

அக்.31: கரோனா பாதிப்பால் வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மறைந்தார்.

அக்.31: "ஜேம்ஸ் பாண்ட்' திரைப்பட வரிசைகளில் முதல் ஜேம்ஸ் பாண்டாக தோன்றி உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஷான் கானரி காலமானார். அவருக்கு வயது 90. 

நவ.11: பஹ்ரைனில் 50 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்த இளவரசர் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபா (84) உடல் நலக் குறைவால் காலமானார். இவரே உலக அளவில் நீண்ட காலம் பிரதமர் பதவியில் வீற்றிருந்தவர். 

நவ.17: முன்னணி தமிழ் பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு.

நவ.25:    ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா (60) மாரடைப்பால் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com