நடந்தவை என்ன? வர்த்தகம்

கரோனா இடர்பாடுகள் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி  நடப்பு நிதியாண்டில்தான் மோசமான செயல்பாட்டை கொண்டிருக்கும் என உலக வங்கி தெரிவித்தது.
நடந்தவை  என்ன? வர்த்தகம்

ஜனவரி

17    கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி அமெரிக்காவில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. சந்தை மதிப்பில் ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.

21 இந்தியாவில் உபேர் ஈட்ஸ் வர்த்தகத்தை கையகப்படுத்தவுள்ளதாக úஸôமேட்டோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, உபேர் ஈட்ஸ் வாடிக்கையாளர்கள், டெலிவரி பார்ட்னர் மற்றும் ரெஸ்டாரெண்டுகள் அனைத்தும் úஸôமோட்டோ நிறுவனத்துடன் இணைக்கப்பட்டன. 

பிப்ரவரி

5    வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காக 1,540 கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு கிடைத்தது.

4. இந்தியாவின் வர்த்தக பங்குதாராக முதலிடத்தில் இருந்த சீனாவை அமெரிக்கா பின்னுக்குத் தள்ளியது. வர்த்தக அமைச்சக  புள்ளிவிவரப்படி 2018}19 நிதியாண்டில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பரஸ்பர வர்த்தகம் 8,795 கோடி டாலராக இருந்தது.

மார்ச்

5    யெஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து அந்த வங்கியின் செயல்பாடு முடங்கும் நிலைக்கு சென்றது.  இதேபோன்ற நெருக்கடி நிலைதான் கடந்தாண்டு செப்டம்பரில் 
பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கும் ஏற்பட்டது.

ஏப்ரல் 

12    கரோனா இடர்பாடுகள் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி கடந்த 1991}லிருந்து ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில்தான் மோசமான செயல்பாட்டை கொண்டிருக்கும் என உலக வங்கி தெரிவித்தது.

ஜூலை 

13    இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளை கட்டமைப்பதற்காக அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார். 

நவம்பர் 

6    அமேசான் வெப் சர்வீசஸ் (ஏடபிள்யூஎஸ்) தனது இரண்டாவது தரவு மையத்தை இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் அமைக்கவுள்ளதாக அறிவித்தது. மேலும், இந்த மையம் 2022}ஆம் ஆண்டு மத்தியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என ஏடபிள்யூ எஸ் தெரிவித்தது.

17 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் வரம்பையும் ரூ.25,000 நிர்ணயித்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை அறிவித்தது.

டிசம்பர்

2     நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாகத் திகழும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் அனைத்து டிஜிட்டல் வங்கிச் சேவை அறிமுகங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் அந்த வங்கிக்கு தடைவிதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com