விருதுகள் 2021

ஏப். 26: அமெரிக்கத் திரைப்படமான "நோமேன் லேண்ட்' க்கு அதிகபட்சமாக 3 ஆஸ்கார் விருதுகள் அளிக்கப்பட்டன.
விருதுகள் 2021
  • ஏப். 26: அமெரிக்கத் திரைப்படமான "நோமேன் லேண்ட்' க்கு அதிகபட்சமாக 3 ஆஸ்கார் விருதுகள் அளிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகளில் வேன்களில் சுற்றித் திரியும் விளிம்புநிலை அமெரிக்கர்களைப் பற்றிய படம் இது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (க்ளோ ஜாவோ), சிறந்த நடிகை (பிரான்சிஸ் மெக்டார்மண்ட்) ஆகிய விருதுகள் இப்படத்துக்குக் கிடைத்தன.
     
  • செப். 18: பிரபல ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா, தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட 6 பேர் சாகித்ய அகாதெமி ஃபெல்லோஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
     
  • அக். 5: ஜப்பானிய-அமெரிக்க வானிலை ஆய்வாளர் சியுகுரோ மனாபே (90), ஜெர்மனி கடல்சார் ஆய்வாளர் கிளாஸ் ஹாசல்மேன் (89) ஆகியோர் "புவி வெப்பமடைதலை நம்பகத்தன்மையுடன் கணித்ததற்காக' இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு பெற்றனர். மேலும், இத்தாலிய கோட்பாட்டு இயற்பியல் ஆய்வாளர் ஜியோர்ஜியோ பாரிசியும் (73) நோபல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
     
  • அக். 6: ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின், ஸ்காட்லாந்தில் பிறந்த டேவிட் டபிள்யூ.சி. மேக்மில்லன் ஆகியோர் இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.
     
  • அக். 7: தான்சானியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னா, காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய அகதிகளின் அதிர்ச்சியான வாழ்வனுபவங்களை எழுதியதற்காக, இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார்.
     
  • அக். 8: பிலிப்பின்ஸ், ரஷிய ஆட்சியாளர்களுக்கு எதிராக அஞ்சாமல் இதழியல் யுத்தம் நடத்திவரும் இதழாளர்கள் மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
     
  • அக். 11: பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கார்ட், மாசாசூசெட்ஸ்  பல்கலைக்கழகத்தின் ஜோசுவா ஆங்கிரிஸ்ட், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் கைடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டது.
     
  • நவ. 22: 2019 ஆம் ஆண்டில் பாலாகோட் விமானத் தாக்குதலின்போது பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய கேப்டன் அபிநந்தன் வர்த்தமானுக்கு குடியரசுத் தலைவரால் வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.
     
  • நவ. 23: கடந்த 2020 ஜூன் மாதம் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 16-ஆவது பிகார் பிரிவின் கமாண்டிங் அதிகாரியான கர்னல் பி.சந்தோஷ் பாபு மற்றும் 19 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சந்தோஷ் பாபுவுக்கு மரணத்துக்குப் பிந்தைய இரண்டாவது உயரிய விருதான மகாவீர் சக்ரா (எம்விசி ) வழங்கப்பட்டது. 
     
  • அவருடன் போரில் வீர மரணமடைந்த 5 இந்திய வீரர்களுக்கு வீர் சக்ரா (விஆர்சி) விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com