2021 வர்த்தகம்

ஜன. 1: ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பயனாளிகளின் சில விவரங்களை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
2021 வர்த்தகம்
  • ஜன. 1: ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பயனாளிகளின் சில விவரங்களை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
     
  • ஜன. 5: கரோனா தொற்றால் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலையால் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) தனது பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்தது.
     
  • மார்ச் 19: முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதமாக இருந்த குடும்பங்களின் நிதிச் சேமிப்பு 2020 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10.4 சதவீதமாக சரிவடைந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
  • ஏப்.1: தொடர்ந்து 6-ஆவது முறையாக நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.
     
  • ஏப்.10:  சந்தையில் ஆதிக்கம் செலுத்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அலிபாபா நிறுவனத்துக்கு சீன ஒழுங்காற்று அமைப்பு 278 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,000 கோடி) அபராதம் விதித்தது.
     
  • மே 25: எண்ம (டிஜிட்டல்) ஊடக நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளுக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
     
  • ஜூன் 12: வாராக் கடன்களைக் குறைத்துக் காட்டும் வகையில் இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்தன.
  • ஜூலை 17: "ஜஸ்ட் டயல்' நிறுவனத்தை ரூ.5,710 கோடிக்கு கையகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் அறிவித்தது.
     
  • செப்.29: திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து விட்டதாக பிரமல் எண்டர்பிரைசஸ் அறிவித்தது.
     
  • நவ.18: முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேடிஎம் பங்குகள் மும்பை 
  • மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. ஆனால், முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி மும்பை பங்குச் சந்தையில் பேடிஎம் பங்குகளின் விலை 27 சதவீதம் சரிவடைந்து ரூ.2,150-லிருந்து  ரூ.1,564-ஆக குறைந்து நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com