முகப்பு Year Ender
கரோனாவுக்கு சுற்றுலாத் துறை எவ்வாறு பதிலடி கொடுக்க முடியும்?
By ஆர்.வெங்கடேசன் | Published On : 29th December 2021 04:34 PM | Last Updated : 29th December 2021 06:11 PM | அ+அ அ- |

உலகம், நாடுகள் என ஒவ்வொரு பிராந்தியத்திலும் பல்வேறு கலாச்சாரங்களுடன் ஒரு உன்னதமான வரலாறு இணைக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் முன்னிலைப்படுத்த சுற்றுலா தான் சிறந்த வழி. இதன் மூலம், சிறப்புமிக்க இடங்கள் வகிக்கும் பங்கைப் பற்றி நாட்டில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தி வரும் துறைதான் சுற்றுலாத்துறை.
அந்த துறை 7.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார பங்களிப்புடன் வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழிலாகும். உலகில் 10 வேலைகளில் 1 சுற்றுலாவை ஆதரிக்கிறது. இது உலக வேலைவாய்ப்புகளில் 99 சதவிகிதத்தை கொண்டவையாக உள்ளது.
கரோனா தொற்று பரவல் முழு உலகத்தையும் ஒரு முழுமையான முடக்கத்திற்கு கொண்டு வந்தது மற்றும் உலகளவில் மக்களின் வாழ்க்கையில் பெரும் பொருளாதர இழப்புகளையும், இடையூறுகளை உருவாக்கியது. உலகப் பொருளாதாரத்தையும் மோசமாகப் பாதித்தது, பெரிய அளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட அனைத்து தொழில்களிலும், பொதுமுடக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் துறை மிகவும் பாதிக்கப்பட்டது.
உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சிலின் அறிக்கையின்படி, கரோனா தொற்று சுற்றுலாத் துறையில் கிட்டத்தட்ட 22 பில்லியன் டாலர்கள் மற்றும் உலகளவில் கிட்டத்தட்ட 50 மில்லியன் பேர் வேலைகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கிராமப்புற அல்லது நகர்ப்புறங்களில் வசிக்கும் நமது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் ஏதோ ஒரு வகையில் பயணத் துறையின் ஒரு பகுதியாக உள்ளனர். அரசாங்கத் தரவுகளின்படி, ஏப்ரல் - டிசம்பர் 2020 வரையிலான 9 மாதங்களில் கிட்டத்தட்ட 21.5 மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர். இருப்பினும், நாடு முழுவதும் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கங்கள் மூலம் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் மூலம் இந்தியாவின் சுற்றுலாத் துறையிக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனத் தெரிகிறது.
பெங்களூரைச் சேர்ந்த சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரெட்கோர் அறிக்கையின்படி, இந்தியாவின் சுற்றுலா சந்தை 2027 ஆம் ஆண்டில் $125 பில்லியன் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் இந்தியாவின் 3 லட்சம் + முகவர்கள் மீது கவனத்தை திருப்பியுள்ளது. ஒட்டுமொத்த சந்தை அளவில் $65 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பு
கரோனா தொற்று கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா மற்றும் சுற்றுலாத் துறைக்கு நெருக்கடியான காலமாக இருந்தபோதும், பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தில் இந்தத் துறை நல்லதொரு எழுச்சியை காணத் தொடங்கியது.
பெரும்பாலான பயணிகள் புனிதப் பயணங்களை மேற்கொள் தொடங்கினர். இது கரோனாவுக்கு பிந்தைய உலகில் மேலும் ஏற்றம் காணும் ஒரு போக்காக அமைந்தது. அதாவது மக்கள் குறைந்த தூர நகர பயண இடைவேளைகளில் இருந்து குறைந்த விமானங்கள் மற்றும் நீண்ட பயண நோக்கத்துடன் வெகுதூரம் செல்வதால் நீண்ட நேர தொலைதூரப் பணிக்கு செல்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுக்கு வாய்ப்பாக அலுவலகங்கள் இப்போது கதவுகளைத் திறந்து வருகின்றன.
தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த அதிகமான மக்கள் மீண்டும் தங்கள் பணி நிறுவனங்களின் இடங்களுக்குத் திரும்பிச் செல்வதால், வணிகப் பயணத்திற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையைப் பொறுத்தவரை, கல்லூரிகள் மீண்டும் தொடங்கத் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் இப்போது நேரடி வகுப்பிற்கு சென்று வருகின்றனர்.
இவை மிகவும் வசதியான பயணத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்தவும், மேலும் அதிகரிக்கவும் உதவும்.
ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற்றியமைத்துள்ளது மற்றும் தினசரி அடிப்படையில் பரிவர்த்தனை செய்யும் போது சமூக இடைவெளியை உறுதி செய்வது போன்றவை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் பயணிகளின் நம்பிக்கையை கணிசமாக மீட்டெடுக்க முடியும்.
* தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனித்துவம் அடங்கிய தீர்வுகளை வழங்குதல்.
* முகவர் மற்றும் இறுதி நுகர்வோரின் பயணத் தேவைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதற்கு பெரும் நிறுவனங்கள் உதவலாம்.
* ஒரு நபர் பயணம் செய்ய விரும்பினால், அவர்கள் டிக்கெட் முன்பதிவு முதல் ஹோட்டல் முன்பதிவுகள், பிற பயணம் மற்றும் போக்குவரத்து முன்பதிவுகள் வரை நிறைய செயல்பாடுகள் உள்ளதால், இதற்கு இடைத்தரகர்களாகச் செயல்படுவர்களுக்கு போட்டித்திறன் வாய்ந்த மார்ஜின்களையும், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலைகளையும் அவர்கள் வழங்கி உதவலாம்.
நாட்டில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருவதால், சுற்றுலாத்துறை ஒரு முன்னேற்றத்தைக் காணும், கரோனாவால் பல மாதங்களாக வேலை இல்லாமல் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள், குடும்பத்தை நடத்துவதற்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
‘பழிவாங்கும் பயணம்’, அதாவது, பல மாதங்களாக வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்ட மக்கள் இப்போது இன்னும் அதிகமாக பயணம் செய்வார்கள், மேலும் அடிக்கடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவார்கள். ‘பழிவாங்கும் பயணத்தில்’ இருந்து விடுபடுவார்கள்.
இது நிச்சயமாக சுற்றுலாத் துறை மற்றும் அது தொடர்பான வணிகங்களுக்கு ஏற்ற காலத்திற்கான ஆரம்பம் என்று கூறுவது தவறாகாது.
மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்ற உண்மையைத் மறுத்துவிட முடியாது, ஆனால் நமது பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடப்படுவதால், தேவையான முன்னெச்சரிக்கைகள் குறித்து அறிந்திருப்பதால், பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையினருக்கு நிச்சயமாக பிரகாசிப்பார்கள்.
எவ்வாறு மீட்டெடுக்காலம்
உலகத்தை பாதித்த வைரஸால் சுற்றுலாத் துறையை வளர்ப்பது எளிதான காரியமல்ல. மக்களின் வருமான ஆதாரங்கள், உணவு, கல்வி போன்றவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதற்கு தேவையான பின்னணியை அரசாங்கம் தயாரித்து வருகிறது.
* சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சுற்றுலாத் துறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.
* சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
* நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு "ஒருவரால் ஒருவர்" சலுகைகளை வழங்க விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்த வேண்டும்.
* சுற்றுலாப் பயணிகளுக்கு நிவாரண திட்டங்களை அறிமுகப்படுத்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
* சுற்றுலா பயணிகள் அடிக்கடி வருகை தரும் இடங்களுக்கு நுழைவுக் கட்டணத்தில் சலுகைகளை வழங்க வேண்டும்.
* தொற்று பாதிப்பை அறிவதற்கான பி.சி.ஆர் சோதனை அறிக்கை மூன்று மணி நேரத்திற்குள் ஆய்வகத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும்.
* சுற்றுலாத் துறை, குழந்தைகள் பள்ளி கல்வி உள்ளிட்ட ஒவ்வொரு துறையும் விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக, நேர்மறையான நடத்தை மற்றும் நேர்மறையான மனித மனநிலையைப் பின்பற்றுவது முக்கியம்.
வரும் புத்தாண்டு கோடை விடுமுறைகள் காரணமாக, மற்ற மாதங்களைவிட டிசம்பர் இறுதியில், விமான டிக்கெட்டுகளின் விற்பனை அதிகமாக இருக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த சூழலில் கடந்த 3 நாட்களில் மட்டும் வெளிநாடு செல்வதற்கான டிக்கெட்டுகள், குறைந்தது 20 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது பரவத் தொடங்கியுள்ள ஒமைக்ரான் தொற்று கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சுற்றுலாத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.