2022 சினிமா

சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்திய 'ஜெய்பீம்' படம் ஆங்கிலம் அல்லாத அயல்மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022-க்கான படமாக நுழைந்தது.
2022 சினிமா

ஜனவரி

21: சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்திய 'ஜெய்பீம்' படம் ஆங்கிலம் அல்லாத அயல்மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022-க்கான படமாக நுழைந்தது.

மார்ச்

20: நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி, பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை மீண்டும் கைப்பற்றியது. 23.6.2019-இல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டன.

25: எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான "ஆர் ஆர் ஆர்' படத்துக்கு இந்தியா முழுமையும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஏப்ரல்

14: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த நடிகை அலியா பட் - பாலிவுட் நடிகர் ரண்வீர் கபூர் திருமணம் நடைபெற்றது.

15: கன்னடத்தில் உருவாகி "பான் இந்தியா' படமாக வெளியான "கேஜிஎஃப் 2' இந்திய சினிமாவில் புது சாதனை படைத்தது. வசூல் ரீதியாக இந்திய சினிமாவில் புது அத்தியாயம் உருவாக்கியது.

19: நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி திருமணம் நடைபெற்றது.

ஜூன்

9: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

ஜூலை

22: 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றில் சுதா கொங்கரா இயக்கிய "சூரரைப் போற்று' திரைப்படம் 5 விருதுகளையும், வசந்த் எஸ் சாயின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் 3 விருதுகளையும் மடோன் அஸ்வினின் "மண்டேலா' திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றன.

செப்டம்பர்

30: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "பொன்னியின் செல்வன்' படம் வெளியாகி, 
ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

அக்டோபர்

4: அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாய் வழங்கினர்.

28: நடிகர் ஹரிஸ் கல்யாண், நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நவம்பர்

12: கரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் "80-ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மும்பையில் அனைவரும் சந்தித்தனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர்.

28: நடிகர் கௌதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது.

டிசம்பர்

1: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் எல்.எம். முரளிதரன் (65) மாரடைப்பு காரணமாக காலமானார்.

5: நடிகை ஹன்சிகா தனது நீண்ட கால நண்பர் சோஹலை மணந்து கொண்டார்.

24: எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய "ஆர் ஆர் ஆர்' படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com