ஒரு புதிய மாநில நிர்வாகம் பொருளாதார சூழலை எவ்வாறு சமாளிக்க இருக்கிறது என்பதும், பொருளாதாரத்தை அரசு எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்பதையும் பெரும் சவாலாகவே நான் (கட்டுரையாளர்) பார்க்கிறேன்.
தற்போதைய கடுமையான பொருளாதார எதார்த்தங்களை எதிர்கொள்வதற்கு சீரிய கொள்கை முடிவுகளும், பொருளாதார மேலாண்மையும் அவசியம்.
கடன்சுமை மாநிலத்தின் மூலதன செலவினங்களை கேபிட்டல் எக்ஸ்பென்டிச்சர் தின்று ஜீரணித்து விடுகிறது. அவ்வாறெனில் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என்பது புரியாத புதிராகவே திகழ்கிறது.
மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியின் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில், நிதி மேலாண்மையைக் கையாள்வதில் பெரும் சவாலை நோக்கி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது புதிய அரசு.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 வழங்குவோம் என்ற வாக்குறுதியும், ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கான மாத உதவித் தொகை போன்ற நலத் திட்டங்கள் புதிய அரசின் தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்றும், விஜய் அரசில் உள்ள அனுபவமற்ற புதிய அமைச்சர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும் பெரும் சவாலாகவும், கேள்விக்குறியாகவும் அமைந்திருக்கிறது.
கவனமாகச் செயல்பட்டால் மட்டுமே ஆட்சியை அடுத்தகட்டத்துக்கு அழைத்துப் போக முடியும் என்பதை முதல்வர் விஜய் அறிந்து கொண்டு தனது அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசைக் கொண்டு சென்றால் வரலாறு என்றும் வாழ்த்தும்.