வரலாற்றுப் பொக்கிஷங்கள்!

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

21 பெரிய செப்பேடுகளையும், 3 சிறிய செப்பேடுகளையும் கொண்டுள்ள இவை சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதாகத் திகழ்கின்றன. செப்பேடுகளைக் கொண்டுவருவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை நீண்டகாலம் மேற்கொண்டாலும் தற்போது அவை சாத்தியமாகியிருக்கிறது.

காலனித்துவ ஆட்சிக்காலத்தில் நம் மண்ணிலிருந்து விட்டுத் திருடப்பட்டு நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் முடங்கிக் கிடந்த இந்தத் தமிழர்களின் ஆகச்சிறந்த பொக்கிஷம் இப்போது மீண்டும் தாய்மண்ணுக்குத் திரும்பியிருக்கிறது.

மதநல்லிணக்கத்துக்குப் பெயர் பெற்ற ராஜராஜ சோழன் அந்த பெளத்த விகாரின் பராமரிப்புச் செலவுகளுக்காக ஆனைமங்கலம் கிராமத்தில் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார்.

சண்டையில் அந்த வரலாற்று ஆணையை அவரது வீரம் செறிந்த மகன் முதலாம் ராஜேந்திர சோழன் செப்புத் தகடுகளில் நிரந்தர சாசனமாகக் குறித்து வைக்கிறார்-இதுவே ஆனைமங்கலம் செப்பேடு. 30 கிலோ எடை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 21 செப்பேடுகள்- இதுவே சோழர்கள் காலத்துக்குத் தந்த நன்கொடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....