இது 'க்யூஆர் கோடு' காலம்!

'எண்ம இந்தியா' என்ற கனவு சாலையோர மனிதரின் கையில் உள்ள 'க்யூ ஆர் கோடாக' உருவெடுத்துள்ளது.

திருப்பதி உண்டியல் காணிக்கை முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வரை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே பணம் செலுத்தும் நிலை.

யுபிஐ மூலம் கண்ணுக்குத் தெரியாமல் மற்றொருவருக்கு பணம் கைமாறும்போது செலவும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மாதக் கடைசியில் கணக்கில் இருந்த பணம் எங்கே போனது? என்று ஆராய அந்த செயலியைத் திறந்து பார்க்கிறோம்.

எண்ம பணப் பரிவர்த்தனை அதிகரித்த பிறகு நகர்ப்புற இளைஞர்களின் சராசரி மாதச் செலவு 23% அதிகரித்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது.

சொமேட்டோ, ஸ்விக்கி, அமேஸானில் 'பே லேட்டர்' வழிமுறை இருப்பதால் இந்த மோகம் இன்னும் அதிகரித்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாது செலவாகும் பணம் கடனாக பின்னாளில் மாற வாய்ப்பு இருக்கிறது.

படிக்காத பாமரன் மட்டுமல்ல, படித்த ஐ.டி. நிறுவன ஊழியர்களும் ஏமாறுகிறார்கள். பணத்தைப் பாதுகாக்க நம்முடைய பீரோவுக்கு பூட்டு போட்ட நாம், இப்போது அறிதிறன்பேசிக்கு எப்படி பூட்டு போடுவது? என யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று வாட்ஸ்-ஆப்பிலேயே கல்யாண பத்திரிகை அனுப்பி வைக்க, பதிலுக்கு 'கியூஆர் கோடு' மூலமாக மொய்ப்பணம் அனுப்பும் காலமாகிவிட்டது.

தொழில்நுட்ப வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த முறையால் மனிதத்தையும் வாழ்க்கையையும் சரியாகக் கையாளத் தெரிந்தால் நல்லது. இல்லையென்றால் எல்லாம் இருந்தும் உயிர்ப்பு இல்லாத தலைமுறையாக நாம் மாறி விடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....