DIN
அதிகாலையில் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பது கண்களுக்கு நல்லது. வைட்டமின் டி கிடைக்கும். அதிகாலையில் சூரியனைப் பார்த்து கண்களை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாக நகர்த்த வேண்டும். கண்கள் தெளிவு பெறும்.
அன்னாசி, கொய்யா, பேரிச்சை, மாதுளை, ஆப்பிள், மா, பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களும் எடுத்துக்கொள்ளலாம்.
கண் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்து வைட்டமின் "ஏ'. ஜாதிக்காய், கேரட், பச்சை காய்கறிகள், பப்பாளி, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடை மிளகாய், சிறிய மீன்கள், ஆட்டு ஈரல் போன்வற்றை உணவில் சேர்க்கலாம்.
கண் புரையைத் தடுக்க உதவுகிறது வைட்டமின் "சி'. கண்ணில் உள்ள இணைப்புத் திசுக்களுக்கு உறுதியளிப்பதுடன், சீரான ரத்த ஓட்டத்திற்கும் துணை புரிகிறது. நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, ஆரஞ்சு நிற பழங்கள், கீரைகளை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
அதிக நேரம் கணிணி பயன்படுத்துவோர் கண்கள் குளிர்ச்சியாக இருக்க வெள்ளரிக்காய் கண்களுக்கு மேல் வைத்து சற்று ஓய்வெடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.