மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும்.
தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நாளை காலை தீவிர புயலாகும்.
இதற்கு ரீமெல் என பெயர் வைக்கப்படும்.
இது தீவிர புயலாகி, நாளை நள்ளிரவு வங்கதேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடக்கும் என கணிப்பு
புயல் கரையை கடக்கும் நேரம் காற்று 110-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.