இணையதளச் செய்திப் பிரிவு
தில்லியில் இந்த குளிர்காலத்தின் உச்சமாக, காற்றின் தரக் குறியீடு 461-ஆக ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) கணிசமாக உயர்ந்து பதிவானது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய(சிபிசிபி) தரவுகளின்படி, சனிக்கிழமை(டிச. 13) 432-ஆக காற்றின் தரக் குறியீடு பதிவாகியிருந்தது.
தில்லி, என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நிலை-4 கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் ஷ்(சி.ஏ.க்யூ.எம்.) சனிக்கிழமை அமல்படுத்தியது.
குறைந்தபட்ச வெப்பநிலையும் 8.2 டிகிரி செல்சியஸ்க்குச் சென்றதால் மக்களுக்கு கடும் சிரமம்!
அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைய வழியிலான வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.