இணையதளச் செய்திப் பிரிவு
வாட்ஸ்ஆப் கணக்குகளில் ஊடுருவி தரவுகளைத் திருடும் இணையவழி மோசடிக்காரர்கள் ‘கோஸ்ட்-பேரிங்’ என்ற புதியதொரு யுக்தியைப் பின்பற்றுவதால் கூடுதல் கவனம் தேவை!
‘கோஸ்ட்-பேரிங்’ எப்படி நடக்கிறது?
வழக்கமான மெசேஜ் ஒன்று உங்கள் வாட்ஸ்ஆப் எண் உள்ள அக்கவுண்ட்க்கு வந்தடையும்.
உங்களுக்கு அறிமுகமான வாட்ஸ்ஆப் கணக்கிலிருந்தே அந்த மெசேஜ் வருவதாகவும் காட்டப்படும்.
அந்த மெசேஜ், ஒரு புகைப்படமாகவோ அல்லது ஆன்லைன் லிங்க் ஆகவோ அல்லது பிற வகையிலான ஏதாவது உள்ளீடுகளில் ஒன்றாகவோ இருக்கலாம்.
அதனுள், ஹேக்கர்களின் இணையதள முகவரி ஒன்று ரகசியமாக பிண்ணப்பட்டிருக்குமாம்.
அதை நம்பி, நீங்கள் அந்த மெசேஜை க்ளிக் செய்துவிட்டால், ஒரு இணையதள பக்கத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
பார்ப்பதற்கு ஃபேஸ்புக் (முகநூல்) போலவே இருக்குமாம் அந்த இணையப் பக்கம்.
அதில், சரிபார்ப்பு நடவடிக்கைக்காக உங்கள் ஃபோன் நம்பரை பதிவிட அறிவுறுத்தப்படும்.
நாம் வைத்திருக்கும் வாட்ஸ்ஆப் எண்ணை அங்கே டைப் செய்தவுடன், நமது வாட்ஸ்ஆப் கணக்கிலிருந்து நம்மை அறியாமலேயே பிற சாதனங்களுடன் வாட்ஸ்அப்பை பகிர்ந்துகொள்ளும் ‘டிவைஸ் பேரிங்’ செயல்முறை தொடங்கப்பட்டுவிடும்.
உடனடியாக, அந்த இணையப் பக்கத்தில் ஓடிபி போலவே சில இலக்கங்கள் காட்டப்பட்டும்.
அந்த இலக்கத்தை சரியாக டைப் செய்ய அறிவுறுத்தப்படுவீர்கள்.
நீங்கள் மட்டும் அதனைச் செய்துவிட்டால், உங்கள் வாட்ஸ்ஆப் கணக்குக்கும் ஹேக்கர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுவிடும்.
அதன்பின், உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ், படங்கள் உள்பட சகலமும் ஹேக்கர்கள் வசமாகிவிடும்!
இதனைத் தவிர்க்க, உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு பிற சாதனங்களில் லிங்க் செய்யப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்து, தேவையில்லாத சாதனங்களில் லிங்க் செய்யப்பட்டதாக காட்டப்பட்டால், உடனடியாக அந்த தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும்.
வாட்ஸ்ஆப்பில் இருமுறை சோதனை அம்சமான ‘டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்’ செயல்படுத்துவது கூடுதல் பாதுகாப்பளிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.