மாரடைப்பு அபாயம்! காலையில் எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

இணையதளச் செய்திப் பிரிவு

காலையில் எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருப்பின், மாரடைப்புக்கான சமிக்ஞைகளாக இருக்கக்கூடும்.

காலை எழுந்தவுடன், அதிலும் குறிப்பாக, 6 மணியிலிருந்து பகல் வரை எந்நேரத்திலும் நெஞ்சுப் பகுதியில் மார்பையொட்டி அசௌகரியத்தை உணருவீர்கள். நெஞ்சில் அழுத்தம், இறுக்கம், எரிச்சலை உணருவீர்கள்.

காலை எழுந்தவுடன் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது ஒருவித அசௌகரியம் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கே இந்த அறிகுறி அதிகம் தென்படுமாம்.

காலையில் உடல் சோர்வாகவும் களைப்பாகவும் உணருவீர்கள். மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 40 - 70% பேர்களுக்கு இந்த அறிகுறி ஓரிரு வாரங்களுக்கு முன்பே தென்படுமாம் (கூடுதல் கவனம் தேவை)

காலையில் குமட்டல், வாந்தி, செரிமானக் கோளாறு ஆகியவை இருந்தாலும் மாரடைப்புக்கான அறிகுறிகளாகக் கருதலாம்

உடலில் வியர்வை சுரத்தல், எவ்வித உடற்பயிற்சியும் வேலையும் செய்யும் முன்பாகவே வியர்த்துக்கொட்டுதல், இதயம் பலவீனமடைந்திருப்பதைக் காட்டும் அறிகுறியாக இருக்கலாம்.

மயக்கம் அல்லது குழப்பம். இவையும்கூட மரடைப்புக்கான அறிகுறிகளாம். மருத்துவரை அணுகி இதயம் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்வது நோயின் தாக்கத்தைக் குறைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் செய்திகள், படங்களுக்கு...