ஜோதிடர் பார்வதி தேவி
ஒரு சிலர் ஜென்ம நட்சத்திரம் அன்று எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஒரு சில செயல்களை ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம்.
அன்றாட வழக்கமான செயல்கள், கல்வி, தொழிலில் முயற்சி, பதவி ஏற்பு, வீட்டில் ஹோமம், சொத்து வாங்கும் முயற்சிகளை செய்யலாம்.
பிறந்தநாள் விழா, குழந்தைகளுக்கு முதல் அன்னப்பிரசன்னம் வழங்குதல், உபநயணம், அன்னதானம், உடை தானம், போன்றவற்றை தாராளமாக ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம்.
அவரவர் ஜென்ம நட்சத்திரம் அன்று தவிர்க்க வேண்டிய சில காரியம் உள்ளது.
ஒருவரின் பிறந்த நட்சத்திரம் உடல், மற்றும் லக்கினம் உயிர் என்று பிரிக்கப்படும். உடல் பாதிப்பு என்பது நோய் மற்றும் மனம் பிரச்சனை குறிக்கும்.
ஒருவரின் நோய் குணப்படுத்தும் சிகிச்சை, முதன்முறை மருந்து உட்கொள்ளும் நேரம், அறுவை சிகிச்சை முதலியன ஜென்ம நட்ச்சரத்தில் தவிர்ப்பது நல்லது. அதுவே அவசரம் சிகிச்சை என்றால் தவிர்க்க முடியாது.
ஒருவர் வீட்டில் நடைபெறும் கிரக பிரவேசம், திருமணம், சாந்தி முஹூர்த்தம், புது துவக்க செயல் மற்றும் சுப காரியங்கள் அனைத்தும், அவரர் ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடாது.
பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 8வது நட்சத்திரம் வரும் காலம் நல்ல நாள்கள் அல்ல.
சுபம் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது திருமண நிகழ்வு.
ஆண் - பெண் இருவருக்கும் ஜென்மம் நட்சத்திரம் மற்றும் ஜென்ம மாதத்தில் அன்று திருமணம் செய்யமாட்டார்கள்.
இதுது தவிர 12 ஆகாத நட்சத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் நட்சத்திரங்கள் முகூர்த்திற்கு ஏற்ற நாள்கள் அல்ல.
பொதுவாக கிருஷ்ண பக்ஷம் காலம், ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் திருமணத்துக்கு உகந்தவை அல்ல.
அஷ்டமி, நவமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தசி திதிகள், திரிதின ஸ்பிரிக், அவமா மற்றும் குருட்டு நாள்கள் (சனி, ஞாயிறு, செவ்வாய்) முகூர்த்தம் தவிர்ப்பது நல்லது.
இவை அனைத்தும் பொதுவாக தெரிந்து கொள்ளவேண்டியவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.