அரசு-மக்கள் இணைவது எப்படி?

க. பழனித்துரை

குடிமக்களை ஒரு நாட்டில் அந்த நாட்டு அரசு எப்படிப் பார்க்கிறது, எந்தக் கண்ணோட்டத்தில் அவர்களை நடத்துகிறது, குடிமக்கள் தங்களைத் தாங்களே எப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துத்தான் சமூகத்தில் அரசின் செயல்பாடுகளும் மக்கள் செயல்பாடுகளும் வடிவமைத்துச் செயல்படுத்தப்படுகின்றன.

வளர்ச்சி அல்லது மேம்பாட்டுக் கோட்பாட்டுக்கு நேர் எதிர்மறையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது.

மக்களுக்கு இலவசங்கள் தருவதற்குப் பதிலாக, அவர்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்கத் தேவையான அத்தனை வழிமுறைகளையும் உயர்நிலையில் இருந்து சிந்திக்காமல், மக்களிடம் இருக்கும் அறிவின், திறனின், ஆற்றலின் அடிப்படையில், மக்களின் திட்டத்தில் செயல்படக் கொள்கையும் நிதி ஒதுக்கீடும் அந்த இடத்தில் நடைபெறவேண்டும்.

அரசைப் பிடிக்கத் தெரிந்தவருக்கு அரசு வேலை செய்கிறது. பதவிகளைப் பிடித்தவர்களுக்கும் திட்டங்களைப் பிடித்தவர்களுக்கும் மேம்பாடு சாத்தியமானது. இந்த இரண்டுமே இந்தியாவில் ஏழைகளுக்குச் சாத்தியப்படவில்லை.

மக்களாட்சியில் இருக்கும் மாபெரும் ஆயுதம் வாக்குரிமை-வாக்குச் சுதந்திரம். அதையும் ஏழை மக்களின் ஏழ்மையையும் அவர்களிடமுள்ள அறியாமையையும் பயன்படுத்தி அந்தச் சுதந்திரத்தையும், உரிமையையும் விலை கொடுத்துப் பறித்து, மக்களாட்சியை மாண்பற்றதாக வைத்துள்ளது இந்திய நாட்டுக்கு தலைகுனிவான செயல்.

இந்தச் சூழலை வென்றெடுப்பது எப்படி? மக்களுடன் செயல்பட, மக்களுக்கு வழிகாட்ட, மாற்றுத் தலைமை ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு நகர வார்டுக்கும் தேவை. அந்தத் தலைமை என்பது மக்களை மேய்க்கும் தலைமை அல்ல; மக்களுக்கு வழிகாட்டும் தலைமை. அது ஒற்றைத் தலைமை அல்ல; அது ஒரு கூட்டுத் தலைமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் செய்திகள், படங்களுக்கு...