முனைவர் என். பத்ரி
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (எஸ்.ஐ.ஆர்.) பிறகான தமிழ்நாடு வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755.
நீக்கப்பட்ட வாக்காளார்களின் எண்ணிக்கை 97,37,832.
வாக்காளர் பட்டியலில் பெயரில்லாதவர்கள் தங்களின் பெயரை தகுந்த இருப்பிட ஆவணங்களைக் காட்டி சேர்த்துக் கொள்ளவும் தொடர்ந்து வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் பெரும் பகுதி உதவித் தொகைகளுக்கும், மானியங்களுக்கும் செலவிடப்படுகிறது.
இதனால், மாநில அரசுக்கு தற்போது சுமார் ரூ. 9 லட்சம் கோடி அளவுக்கு கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுவும், அதைச் சாத்தியப்படுத்தும் வகையில் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளைத் திட்டமிடுவதும் நல்லது.
பதவி ஏற்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொழில் வாழ்க்கை முறையை எளிமையாக்கிக் கொண்டால், மக்களின் வரிப் பணம் அதிகமாக வீணாகாது.
ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன முறைகள் அனைத்துத் துறைகளிலும் தவிர்க்கப்படுவது நல்லது.
அரசியல் தொடர்ந்து ஒரு வணிகமாகவோ, லாபம் பார்க்கும் தொழிலாக இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல
தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் நாளாக மக்கள் மாற்றிக்கொள்வது நம் ஒற்றை விரலில்தான் இருக்கிறது.
இந்தியாவின் மக்களாட்சியின் அடித்தளம் வாக்குரிமையே ஆகும். எனவே, வாக்காளார்கள் தேர்தல் நாளன்று தங்கள் வலிமையை உணர்ந்து செயல்படுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.