இணையதளச் செய்திப் பிரிவு
மதியம் 2 - 4 மணி வரை லேசான களைப்பும் தூக்கமும் ஏற்படுவது சகஜமே. அதுவே, கட்டுப்படுத்த முடியாதளவுக்கு தூக்கமும் சோர்வும் ஏற்படத் தொடங்கினால் போதிய வைட்டமின் டி உடலில் இல்லை என்பதன் அறிகுறிகளுள் ஒன்றாகும்.
வைட்டமின் டி குறைபாட்டால் மதியம் அதிகப்படியான உறக்கம், உடலில் அதீத சோர்வு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
மதிய வேளையில், வழக்கமாக உடலில் கார்டிசால் அளவு குறையும். அத்துடன் வைட்டமின் டி பற்றாக்குறை இருக்கும்போது ஆற்றலை தக்க வைக்க உடல் உறுப்புகள் போராடும். இதன் விளைவே தூக்கமும் அதீத சோர்வும்.
செல்களில் ஏடிபி உற்பத்திக்கு வைட்டமின் டி உதவுகிறது. ஏடிபி உடல் ஆற்றலுக்கு ஊற்றாகும். அது குறைந்தால், தசைகள், மூளையில் நேரடியாக பாதிப்பை பிரதிபலிக்கிறது.
உணர்ச்சி மாறுபாடு மற்றும் ஆற்றலை சமன்படுத்தல் ஆகியவற்றுக்கு உடலுக்கு செரொடோனின் அத்தியாவசியம். இதன் உற்பத்திக்கும் வைட்டமின் டி தேவை.
எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி குறைப்பாட்டை கண்டறியலாம். உடலில் 20 - 50 என்.ஜி/மில்லி.லி அளவு வரையறைக்குள் வைட்டமின் டி இருத்தல் அவசியம். 20க்கும் கீழ் இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.
மருத்துவர் பரிந்துரைத்தலின்பேரில், 3 மாதமோ, 6 மாதமோ குறிப்பிட்ட டோஸ் அளவை மிகாமல் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம்.
சூரிய ஒளி ஒருநாளைக்கு குறைந்தது 10 நிமிஷங்களாவது உடலில் படுவதால் வைட்டமின் டி இயற்கையாகவே தோலில் இருந்து உற்பத்தியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.