அங்கீகாரம் தேடும் பெண் விவசாயிகள்!

அறச்சலூர் செல்வம்

சக்தியின்றி சிவம் இல்லை என்பார்கள். இது வேளாண்மையில் அன்றும், இன்றும் உண்மை. வேளாண்மையைத் தொடங்கி வடிவமைத்தவர்கள் பெண்களே. நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனித சமூகங்கள் ஓரிடத்தில் தங்கி வாழ்வதற்கான சாத்தியங்கள் அன்றைய பெண்கள் விதைத்து அறுவடை செய்வது என்ற முறையை உருவாக்கிய பிறகுதான் நடைபெற்றன.

சுவை, மணம், பண்பாட்டு மதிப்பு மற்றும் வீட்டுத் தேவையைக் கொண்டே பெண் உழவர் முடிவு செய்கிறார். அவரது முடிவு வயல், சமையலறை என இரண்டிலும் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்கிறது. இது "பச்சைப் புரட்சி'க்கு முன்புவரை இருந்த நிலை. நிலத்தில் வேளாண்மை செய்வதென்பது ஒரு பெருந்தொழிற்சாலையை நிர்வாகம் செய்வதற்கு இணையானது. இந்த நிர்வாகத்தை அந்தந்த நிலத்துக்கேற்ப வடிவமைத்து நடத்துபவர்கள் இன்றளவிலும் பெண்களாகவே உள்ளனர். உலகளாவிய உணவு உற்பத்தியில் 50% பெண்களின் பங்களிப்பால் கிடைக்கிறது.

வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியில் 60% முதல் 80% வரை பெண்களால்தான் கிடைக்கிறது. விதைகள், உணவு வகைகள் பண்பாட்டைக் காப்பதன் மூலம், பல தலைமுறைகளாக வளர்த்த பயிர்களின் நினைவையும், எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான சூழல் அறிவையும் அவர்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். ஆனால், இத்தகு அறிவுக்கும், செயல்திறனுக்கும் எந்தவித அங்கீகாரமும், மரியாதையும் எவ்விடத்திலும் இல்லை.

அதிகாலை முதல் முன்னிரவு வரை உழைக்கிறார்கள். ஆனால், அதற்குரிய மதிப்போ அங்கீகாரமோ சிறிதும் கிடைப்பதில்லை. நமது தேநீர், காபியில் உள்ள பாலின் ஒவ்வொரு துளியிலும், நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையிலும் இந்தப் பெண் விவசாயிகளின் உழைப்பும், வியர்வையும், வாழ்வும் கலந்துள்ளது.

விடுமுறைகள் ஏதுமின்றி 365 நாள்களும், மழை, சுட்டெரிக்கும் வெயில், நடுங்க வைக்கும் பனி என எத்தகைய சூழ்நிலைகளிலும் இவரது தோளில் ஏறியிருக்கும் எந்த வேலைகளும் நிற்காது, நிறுத்தவும் முடியாது.

தமிழகத்தில் வேளாண் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய மொத்த வேளாண் குடும்பங்கள் எண்ணிக்கை 97,69,400 ஆகும். இதில் 10 ஏக்கருக்குள் நிலவுடைமை உள்ள வேளாண்மை நடத்தும் குடும்பங்கள் 25,40,044 (26.4%) மட்டுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க...