வெ. இன்சுவை
தனிமையிலோ அல்லது கைப்பேசியிலோ சாதாரணமாகப் பேசுபவர்கள், பொது இடத்தில் கண்டுகொள்வதில்லை; யாரோ போல ஒதுங்கிப் போகிறார்கள். அவர் களால் வேறு என்ன செய்ய முடியும்?
தனிமனிதனின் ஒழுக்கத்தை அவனது இயல்பான பண்பைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்' என்றார் எமர்சன். எனவே, ஒருவருடைய சொல்லும் செயலும் சிந்தனையும் நேர்மை, தூய்மை என்னும் அடிப்படையில் அமையும்போது மக்கள் அவரைப் போற்றுகிறார்கள். இதில் ஆண் என்ன, பெண் என்ன?
சமூக வலைதளம் என்பது ஒருவரின் ஆளுமையையும் நற்பண்புகளையும் உலகுக்குக் காட்டும் சாளரமாக இருக்க வேண்டுமே தவிர,கண்ணியத்தைச் சிதைக்கும் குப்பைத் தொட்டியாக மாறிவிடக் கூடாது. சமூகத்தின் இத்தகைய மனப்போக்கு விசனத்துக்குரியது.
தவறான புகார்க் கடிதம் எழுதும் ஒவ்வொரு விரலும் அடுத்தவரின் மன நிம்மதியைக் குலைக்கிறது; ஒருவரின் வாழ்நாள் உழைப்பைக் கொச்சைப்படுத்துகிறது. இத்தகைய அறிவு முதிர்ச்சியற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2026/Feb/26/criticized-photo-posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.