வரவேற்பு பெறாத சுற்றுச்சூழல் சேவை!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பணிகள் உடனடி நன்மைகள் தராது என்பது உண்மையே. அதேபோல் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் விளையும் தீமைகளும் உடனடியாகத் தெரியாது!

ஒரு சுற்றுச்சூழல் விதிமுறை மீறப்படும்போது பொதுமக்கள் அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இங்குதான் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

சுற்றுச்சூழல் தொடர்பான தரவுகள் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதிலும் வனம், நீர் ஆதாரங்கள் குறித்த தரவுகளுக்கு மிகப் பழைமையான ஆவணங்கள் தேவைப்படும்.இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்துத் தான் தீர்ப்பு கிடைக்கும். அதற்குள் விதி மீறலுக்குட்பட்ட இடம் சரி செய்ய முடி யாத அளவுக்கு சிதைந்து போயிருக்கும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது; மாறாக எதிர்ப்புதான் வரும். அதுவும் அவர்கள் பெண்களாக இருந்துவிட்டால் மிக அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

'இந்தப் பூமி நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற சொத்து. இதைப் பாது காத்து நமது அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமை' என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சுமை குறையும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...