எல்பிஜி சிலிண்டர் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா?

எல்பிஜி நுகர்வோர் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு(கேஒய்சி) செய்ய வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்யவில்லை என்றால் சிலிண்டர் விநியோகம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆன்லைன் கேஒய்சி நடைமுறை புதிதானது அல்ல. நுகர்வோர்கள் தங்கள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பைச் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகவே பதிவிடப்பட்டுள்ளது.

இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல, இதுவரை ஒருமுறைகூட ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளாத வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது கேஒய்சி சரிபார்க்க வேண்டும். ஏற்கெனவே ஆதார் சரிபார்ப்பு செய்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை.

அதேபோல உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மட்டும், மானியம் பெறுவதற்காக நிதியாண்டிற்கு ஒருமுறை இச்சரிபார்ப்பைச் செய்ய வேண்டும். இதனால் சிலிண்டர் விநியோகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

சமையல் எரிவாயு சிலிண்டரை முறைகேடாக பயன்படுத்துவோரைக் கண்டறியவும் எரிவாயு முறைகேடுகளைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...