2026 பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு (விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தவெகவில் 107* எம்எல்ஏக்கள்) நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2), விசிக(2), ஐயூஎம்எல்(2) என மொத்தம் 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து, தமிழக ஆளுநரைச் சனிக்கிழமை (மே 9) மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வராக விஜய்யை நியமித்து புதிய அரசு அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்யிடம் சனிக்கிழமை (மே 9) மாலை நியமன கடிதத்தை வழங்கினார்.
மே 10 காலை 10.15 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயைத் தொடர்ந்து, தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
என். ஆனந்த்(சென்னை தியாகராய நகர் தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
ஆதவ் அர்ஜுனா(வில்லிவாக்கம் தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
செங்கோட்டையன்(கோபிசெட்டிப்பாளையம் தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
டாக்டர் கே. ஜி. அருண்ராஜ்(திருச்செங்கோடு தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
பி. வெங்கடரமணன்(மயிலாப்பூர் தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
நிர்மல் குமார்(திருப்பரங்குன்றம் தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
ராஜ்மோகன் (சென்னை எழும்பூர் தொகுதி) ஆறுமுகம் தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
டாக்டர் டி. கே. பிரபு(காரைக்குடி தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
எஸ். கீர்த்தனா(சிவகாசி தொகுதி) தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்றவுடன், முதல்வர் விஜய் விழா மேடையில் வைத்து 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் உத்தரவில் கையொப்பமிட்டார்.
பதவியேற்ற பின் முதல்வராக விஜய் தமது முதல் உரையில், நெஞ்சில் குடியிருக்கும் எனப் பேசத் தொடங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் தவெக அரசு எப்படி பணியாற்றப் போகிறது என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்.
பதவியேற்ற பின் முதல்வராக விஜய் அங்கு குழுமியிருந்த மக்களுடன் சுயபடம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இவ்விழாவில் விஜய் அருகில் புன்னகை பூத்தபடி அமர்ந்து பதவியேற்பு நிகழ்ச்சியை கண்டுகளித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
தமிழக முதல்வரான விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.