தமிழக முதல்வராகவும் அதன்பின் பேரவையில் எம்எல்ஏவாகவும் பதவியேற்றபின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களை இந்நாள் முதல்வர் சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு அரிதினும் அரிதாகப் பார்க்கப்படுகிறது.
மதிமுக தலைவர் வைகோவுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய்! இன்று (மே 11) அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
“ஆரோக்கியமான அரசியல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையாக விஜய்யின் வருகை அமைந்துள்ளது. விஜய்யின் உயர்ந்த பண்பாட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி!” - வைகோ
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மனைவி சௌமியா அன்புமணி (எம்.எல்.ஏ.) ஆகியோருடன் முதல்வர் விஜய்!இன்று அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமது இல்லத்துக்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விஜய்!அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் இல்லத்துக்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்குச் சென்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
தமிழக முதல்வர் விஜய்யைக் கரம்பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின்.
‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்ற புத்தகத்தை முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பரிசளித்து வாழ்த்தினார்.