பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

நாளை (மே 13) சட்டப்பேரவையில் புதிய அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

பெரும்பான்மையை நிரூபிக்க நாளை பேரவையில் வாக்கெடுப்பில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் மொத்த எண்ணிக்கையில் பாதிக்குப்பாதி பேரின் ஆதரவு அவசியம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் 2 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக பேரவையில் மொத்தம் 30 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் 2 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

காங்கிரஸில் 5 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டில் தலா 2 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

மன்னார்குடியில் அமமுக சார்பில் வென்றுள்ள எம்எல்ஏ காமராஜ் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ள திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(மே 12) தீர்ப்பு!

தவெகவில் 108-2 = 106 எம்எல்ஏக்கள், காங்கிரஸில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் 2, இந்திய கம்யூனிஸ்ட்டில் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் 2, மன்னார்குடியில் அமமுக சார்பில் வென்றுள்ள எம்எல்ஏ காமராஜ், சி. வி. சண்முகம் தலைமையிலான அதிமுக அணியில் 30 எம்எல்ஏக்கள் மொத்தம் 150 பேர் தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு!

ஆக, பேரவையில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தம் 150 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெக அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் செய்திகள், படங்களுக்கு...