இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9-ஆக சரிந்துள்ளது. மிகக் குறைந்த அளவாக தில்லியில் 1.2-ஆகவும், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 1.3-ஆகவும் உள்ளது.
கருவுறுதல் விகிதம் குறைந்தபட்சம் 2.1 என இருந்தால்தான் எதிர்காலத்தில் அது தம்பதியை ஈடுகட்டும் விகிதமாக இருக்கும். கருவுறுதல் விகிதம் குறைந்தால் சமூகத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எதிர்காலத்தில் இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதரிப்போர் இன்றி முதியோர் குறிப்பிட்ட சதவீதத்தினர் அநாதைகள் ஆவது அதிகரிக்கும்.
உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவதை தமிழகம் அண்மைக்காலமாக எதிர்கொண்டு வருகிறது. அதனால்தான், தமிழகம் முழுவதும் பிகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ஒடிஸா போன்ற மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதைக் காண முடிகிறது.
மக்கள்தொகை அதிகரிப்பும் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். அதனால், இந்த விவகாரத்தில் சமநிலை பேணப்படுவது அவசியமாகும்