இந்திய ரூபாயின் மதிப்பும் - பொருளாதார வளர்ச்சியும்...

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் சில நன்மைகளும் உண்டு. ஏற்றுமதி அதிகரிக்கும்; அந்நிய முதலீடு வரும்; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கூடும்.

இந்தியர்கள் அனுப்பும் பணத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு அவர்கள் அனுப்பும் ஒவ்வொரு டாலருக்கும் அதிக ரூபாய் கிடைக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகமாகிறது.

2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நம் நாட்டுக்கு 135 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 13 லட்சம் கோடி) அதிகமான தொகையை அனுப்பி இருக்கிறார்கள்.

2026-ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்களுக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.04% வீழ்ச்சி அடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்கு இதுவரை இந்தியா மேற்கொண்ட எந்த முயற்சியும் பெரிய அளவு பலன் அளிக்கவில்லை.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகளை அரசு இரு மடங்குக்கு மேலாக உயர்த்தி இருக்கிறது. அண்மைக்காலமாக நான்கு முறை பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகழாண்டில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து 23 பில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். ரூபாயின் மதிப்பு சரிந்தது இதற்கு முக்கியக் காரணம்.

ரூபாய் மதிப்பு சரிவுக்கு உண்மையான காரணம் வெளிப்புற காரணிகள் மட்டுமல்ல, உள்நாட்டுக் கட்டமைப்புச் சரியாக இல்லாதது முக்கியக் காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தியாவில் உற்பத்திச் செலவு குறைவு. இதைப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் எல்லா உற்பத்திகளையும் பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.ரூபாயின் மதிப்பு உயர்ந்தால்தான் இந்தியாவின் மதிப்பும் உயரும்.

முழுக் கட்டுரையும் படிக்க....