மாறும் உணவுப் பழக்கம்

தமிழ்நாட்டில் பிரியாணி வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பைக் கொண்ட ஒரு மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. இதில் அமைப்பு ரீதியான அல்லது அனுமதி பெற்ற பெரிய உணவகங்கள் மூலமான வியாபாரம் ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி; தெருவோர மற்றும் சிறிய கடைகளின் வியாபார சந்தை மதிப்பு ரூ.7,500 கோடியாக உள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டும் 50 சதவீத வியாபாரம் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டுமே சுமார் 40,000 சிறிய மற்றும் பெரிய பிரியாணி கடைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பிரியாணி கடைகளின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.

நடுத்தர மற்றும் சிறிய கடைகள் தினமும் 40 கிலோ முதல் 100 கிலோ வரை இறைச்சியைப் பயன்படுத்துகின்றன. இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பிரியாணிக்காக மட்டும் தினமும் பல லட்சம் கிலோ இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தினமும் பல ஆயிரம் கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.

பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் இறைச்சி எத்தனை நாள்களுக்கு முந்தையது என்பதற்கு உற்பத்தி தேதி எதுவும் அதில் இருக்காது.கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்டவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, பேதி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என தொடர் பாதிப்புகள் ஏற்படுவதுடன், சில நேரங்களில் உயிரிழப்புகளும்கூட ஏற்படுகின்றன.

பிரியாணி கடைகளில் தரப்படும் உணவு வகைகள் தரமானதா? என்பதை ஒவ்வொரு கடையாகச் சென்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிடுவது சாத்தியமில்லை. எனவேதான், உணவுப் பொருள்கள் மீதான தரக் குறைவு தொடர்பாக புகார் அளிக்க 94440 42322 என்ற பிரத்யேக "வாட்ஸ்ஆப்' எண்ணையும், செயலியையும் உணவு பாதுகாப்புத் துறை வழங்கி வருகிறது.

பிரியாணியை எப்போதாவது சாப்பிடுவதில் தவறில்லை. தினமும் சாப்பிட விரும்புவோர் தரமான கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக்கட்டுரையையும் படிக்க...