கல்வி நிதி ஒதுக்கீட்டில் கவனம்

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.2009-10-இல் கல்விக்கு 4.6 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், 2025-26-இல் 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2025-26-ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 4,791 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25-இல் 14,71,473 என்றிருந்த நிலையில், அது 2025-26-இல் 14,66,682-ஆகக் குறைந்துள்ளது.

முன்பைவிட அரசுப் பள்ளிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்பட்டுள்ளன என்பதில் மாற்றமில்லை. இருப்பினும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முழுமையான அளவில் அடிப்படை வசதிகள் மேம்பட்டிருக்கின்றனவா என்பது சந்தேகம்தான்.

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களைத் தக்கவைப்பதிலும், அவர்களின் பங்கேற்பில் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்தாலும் அவை போதுமானதாக இல்லை என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுவது அவசியமாகும்.

தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலும், அரசுப் பள்ளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக்கட்டுரையையும் படிக்க...