இடைவெளி குறைய வேண்டும்!

அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. அரசியல் தெரிந்த அனைவருக்கும் இது வியப்பாக இருக்கிறது.நான்கு முனைப் போட்டியில் 108 இடங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து விட்டது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

ஆட்சியைப் பிடிக்க இன்னும் 10 இடங்கள் தேவை என்று ஆளுநர் கூறிய போது, மக்களின் அனுதாபமும், ஆதரவும் இருமடங்கானது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்து அந்த இடைவெளியை இட்டு நிரப்பியது.

தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் துவண்டு போகாமல், தங்கள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த ஓய்வு அதற்கானதே என்று எண்ண வேண்டும்.

மக்களாட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் ஆளும் கட்சியின் ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. அரசியல் என்பதும் அர்ப்பணிப்பாக இல்லாமல் தொழிலாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவது என்பதெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது. இதனால் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் இடைவெளி அதிகமாகி விட்டது. இது குறைய வேண்டும்.

உண்மையில் அதிகாரம் மக்களிடத்தில்தான் உள்ளது. இப்போதைக்கு அந்தப் பிரதிநிதிகளிடம், யாரைத் தேர்ந்தெடுக்கிறோமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

காலம் எதையும் மாற்றும் என்பது உண்மைதான். மாறுதல் மட்டுமே மாறாதது என்பதும் உண்மைதான். வரலாறுகள் எப்போதும் முன்னோக்கி போக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....