விழிப்புணர்வே தீர்வு!

இணையவழி குற்ற உதவி எண் 1930 மற்றும் என்.சி.ஆர்.பி. இணையதள சேவை எனப் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கும் அவர்கள் இழந்த பணத்தை மீட்பதற்கு காவல் துறை மற்றும் வங்கிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைந்த நடவடிக்கை எனப் பல்வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு என்ற ஆசைகாட்டி படித்த இளைஞர்களைக் கவர்ந்திழுத்து அவர்களுக்கு நல்ல ஊதியமும் கொடுத்து இந்தக் குற்றங்களை செய்வதற்காக பயன்படுத்துவதும் தெரிகிறது.

பெரும்பாலான நேரங்களில், இந்த காலஅளவைத் தாண்டி புகார்கள் கொடுக்கப்படுவதால் புகார்கள் வருவதற்கு முன்பே திருடப்பட்ட பணம் ஏராளமான வங்கிக் கணக்குகளில் மாற்றம் செய்யப்பட்டு பிரித்து ஆங்காங்கே சென்று குற்றவாளிகளைச் சென்றடைகிறது.

இணையவழிக் குற்றங்கள் தடுக்கப்படுவதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை. இணையவழிக் குற்றங்கள் பற்றி பல தளங்களில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும்போதுதான் முழுமையான விழிப்புணர்வு ஏற்படும்.இணையவழிக் குற்றங்கள் பற்றி பல தளங்களில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும்போதுதான் முழுமையான விழிப்புணர்வு ஏற்படும்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இணையவழிக் குற்றம் குறித்த விழிப்புணர்வு தேடி வரக்கூடியவர்களுக்கு ஒரே இடத்தில் எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடிய வகையில் செய்யலாம்.

விழிப்புணர்வு, விரைவான நடவடிக்கைகள்மூலம் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது சமுதாயக் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையையும் படிக்க...