வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்ற...!

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதையப் பருவத்தில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் அதிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக்

News image
Updated On :18 நவம்பர் 2016, 4:48 am

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதையப் பருவத்தில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் அதிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டேஸ்வரம், ஆலத்தூர், கீழ்கொண்டையார் மற்றும் அருக்கம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 சேத அறிகுறி: பூச்சிகள் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போலக் காணப்படும்.
 பொருளாதார சேத நிலை: தூருக்கு ஒரு பூச்சி, தூரில் சிலந்தி காணப்பட்டால் தூருக்கு 2 பூச்சிகள் என பொருளாதார சேதம் ஏற்படும்.
 மேலாண்மை முறைகள்: நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பத்தி நடவு செய்தல். மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். களைச் செடிகளை அகற்றி விட வேண்டும்.
 புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, கோ42, பிஒய் 3 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.
விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம்.
 மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப்பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன.
 பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளõக்க வேண்டும். குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி-150 மிலி. இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் - 100 மிலி, பயூப்ரோபெசின் 25 எஸ்.சி -800 மிலிடைகுளோர்வாஸ் 76 எஸ்.சி 625 மிலி அசிப்பேட் 76 எஸ்.பி. -625 கிடிரைஅசோபாஸ் -40 இசி- 625 மிலி இட வேண்டும்.
 புகையானின் மறு உற்பத்தியைப் பெருக்கும் மிதைல் பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளைத் தெளõக்கக் கூடாது என்றார்.
 பாசியைக் கட்டுப்படுத்த...:
மேலும், நெல் வயலில் பாசியைக் கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஒரு கிலோ வீதம் ஒரு ஏக்கருக்கு இடவேண்டும் என அறிவியல் நிலைய மரபியல் துறை உதவி பேராசிரியர் அ.மணிமாறன் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.