லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

"அகியூல்லா 250' புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்

டி.எஸ்.கே. ஹையோசங்க் நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட "அகியூல்லா 250' மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2017, 4:04 am

டி.எஸ்.கே. ஹையோசங்க் நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட "அகியூல்லா 250' மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அகியூல்லா 250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்து அந்தக் குழுமத்தின் தலைவர் சிரீஷ் குல்கர்னி பேசியது:
 இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆடம்பரமான, புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் அகியூல்லா 250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளோம்.

மெட்டல் கிரீன், கார்பன் பிளாக், டெசர்ட் பிரவுண் உள்ளிட்ட 3 வண்ணங்களில் எளிதாக கையாளும் வகையில் கிளட்சும், 5 கியர் கொண்ட மோட்டார் சைக்கிளின் விலை பெங்களூரில் ரூ.2.94 லட்சத்திலிருந்து தொடங்குகிறது என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.