பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள கேரள பரம்பிக்குளம் வனத் துறையின் தகவல் மையத்தை அம்மாநில வனத் துறை அமைச்சர் கே. ராஜு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
கேரளம் மாநிலம், பரம்பிக்குளத்தில் வனச் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் பொள்ளாச்சியில், மீன்கரை சாலையில் கேரள அரசு ரூ. 2 கோடி மதிப்பில் சுற்றுலாத் தகவல் மையத்துகான புதிய கட்டடத்தை கட்டியுள்ளது.
இந்த சுற்றுலா மையத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கேரள வனத் துறை அமைச்சர் கே. ராஜு இம்மையத்தைத் திறந்துவைத்தார். அம்மாநிலத்தைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இது குறித்து கேரள வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த மையத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தங்கும் வசதியுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வனத் துறை, இயற்கை சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் குறித்த தகவல்களை இங்கு பெறமுடியும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு

நடிகர் விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்: விக்னேஷ் சிவன்

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது: குஷ்பு

”கேப்டனுக்கு திரைப்படத்தில் வாக்கு கேட்டேன்! மகனுக்கு நேரில் வாக்கு கேட்கிறேன்!” MK Stalin
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

