புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சங்கரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ராஜ்குமார் தொடக்கிவைத்தார். மாநில துணைத் தலைவர் சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.  
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் இருந்து 1.3.2003 முதல்  பிடித்தம் செய்த தொகையை அரசு எங்கும் முதலீடு செய்யவில்லை. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு மையத்திலும் முதலீடு செய்யவில்லை.
 புதிய ஓய்வூதிய சட்டப்படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் எளிதாக பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற இயலும். எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய முறை தொடர அரசு உத்தரவிடவேண்டும்.
அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 80 வயது பூர்த்தி அடைந்தவுடன் தொடங்கும் கூடுதல் ஓய்வூதியத்தை தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-இல் இணைத்து விதிகள் திருத்தம் செய்து ஆணை வெளியிடவேண்டும்.  
 ஈரோடு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஈரோடு நகரில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை நல்ல முறையில் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 கூட்டத்தில், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் மணிபாரதி, பொருளாளர் தேவராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com