செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் இலவசப் பயிற்சி

மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் நடத்தும் செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் இலவசப் பயிற்சி
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் நடத்தும் செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் இலவசப் பயிற்சி ஜூன் 5 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை 30 நாள்கள் நடைபெறவுள்ளது.
 ஈரோடு, அசோகபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலாயா சிறுவர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் இளைஞர்கள், பெண்கள், சுய உதவி குழுவினர் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை ஆகும். இப்பயிற்சி தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை (ஞாயிறு தவிர) நடைபெறும். பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை.
 பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0424 2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com